தருமபுரி, மே.07:
தருமபுரியில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும், ரயில்வே துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மைய மாவட்ட செயலாளர் த.கு. பாண்டியன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், சிசுபாலன் உள்ளிட்ட இடதுசாரி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)