தருமபுரி, மே.06:
தருமபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க மூன்று முதியவர்கள் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உயிரிழந்தவர்களின் அடையாளம் மற்றும் உறவினர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், அவர்களின் உடல்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பச்சியம்மன் கோவில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
இந்த மனிதநேய பணியில் தருமபுரி நகர காவல் நிலைய சிறப்பு காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் செந்தில், சண்முகம், கணேஷ் மற்றும் சிவன் திருவடி சேவை குழுவினர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மை தருமபுரி அமைப்பின் அமரர் சேவை மூலம் இதுவரை 209 ஆதரவற்ற மற்றும் ஏழ்மையில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)