Type Here to Get Search Results !

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தருமபுரியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தருமபுரி, மே.20:


தருமபுரி மாவட்டத்தில் CPI, CPI(M), CPM(ML) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் சார்பில் மத்திய அரசை கண்டித்து தருமபுரி தொலைபேசி நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கலைச்செல்வன், சிசுபாலன், குமார், விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் “பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெறுக”, “விலை உயர்வை உடனடியாக ரத்து செய்க” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் இடதுசாரி கட்சிகளின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies