தருமபுரி, மே.21:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 மற்றும் பட்டதாரிகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 03.06.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்:
- அரசு தொழிற்பயிற்சி நிலையம், தருமபுரி – 9171318318
- அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரூர் – 8015301017
- அரசு தொழிற்பயிற்சி நிலையம், காரிமங்கலம் – 7010865277
- மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தருமபுரி – 04342-288099 / 9500671416
மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பம்சங்கள்:
- மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை
- “தமிழ் புதல்வன்”, “புதுமைப்பெண்” திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000
- ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை சேர்க்கை வாய்ப்பு
- பெண்களுக்கு வயது வரம்பில்லை
- இலவச பாடப்புத்தகங்கள், சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி, வரைபட கருவிகள், காலணிகள்
- இலவச பேருந்து பயண அட்டை
- உணவுடன் கூடிய இலவச விடுதி வசதி
- மத்திய அரசின் NTC சான்றிதழ்
- பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு
மேலும் விவரங்களுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்புகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)