Type Here to Get Search Results !

குட்டை போல் காட்சியளிக்கும் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை; பருவமழையை எதிர்நோக்கும் விவசாயிகள்.


பாலக்கோடு, மே.21:
 


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணை தண்ணீரின்றி குட்டை போல் காட்சியளிப்பதால், குடிநீர் மற்றும் பாசன விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு அடுத்துள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணை 50 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் 11 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, பாலக்கோடு பேரூராட்சி, மாரண்டஹள்ளி பேரூராட்சி மற்றும் தருமபுரி நகராட்சி பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


மேலும், இந்த அணையை நம்பி சுமார் 4,500 ஏக்கர் பாசன விவசாய நிலங்கள் உள்ளன. தருமபுரி மற்றும் பாலக்கோடு பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த அணை, கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், தருமபுரி மற்றும் பாலக்கோடு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும், அணையை நம்பி விவசாயம் செய்து வந்த ஏராளமான விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறியுள்ளது.


பருவமழை தொடங்கினால் மட்டுமே சின்னாறு அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து ஏற்படும் என்பதால், விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies