தருமபுரி, மே.12:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில், கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் (Illicit Arrack), போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஒழித்தல் (NCORD) தொடர்பான பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
11.05.2026 அன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் காவல்துறை, வருவாய்த் துறை, மதுவிலக்கு அமல்பிரிவு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், மருத்துவத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், இ.கா.ப., உதவி ஆணையர் (ஆயம்) கோ. கோபு, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) கேசவன், மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)