Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22ஆம் தேதி நடைபெறும். - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, மே.19:


தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 22.05.2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகள் மற்றும் கருத்துகளை எடுத்துக்கூறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட விவசாயிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies