Type Here to Get Search Results !

சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு 8 வகை நலத்திட்ட உதவிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை.


தருமபுரி, மே.29:


சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தகுதியுடையவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்

  • விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை
  • இயற்கை மரண உதவித்தொகை
  • ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை
  • கல்வி உதவித்தொகை
  • திருமண உதவித்தொகை
  • மகப்பேறு உதவித்தொகை
  • மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்
  • முதியோர் ஓய்வூதியம்


உறுப்பினராக சேர தகுதி

சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயதிற்குள் உள்ளவர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் பணிபுரியும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெற தகுதியுடையவர்கள்.


இதில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் உடலுழைப்பு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்பெறலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி

உறுப்பினர் பதிவு மற்றும் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெறும் வகையில் இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் www.dncwb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies