தருமபுரி, மே.18:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 597 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இஆப., அவர்கள் இன்று பெற்றுக்கொண்டார்கள். இந்த மனுக்களில் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி, வீட்டு வசதி, சாலை, மின்வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு விரைவில் தீர்வு வழங்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை காலதாமதமின்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)