Type Here to Get Search Results !

அதிகாரப்பட்டியில் அனைத்து நாயுடுகள் நலச்சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


பாப்பிரெட்டிப்பட்டி, மே.03:


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டியில் அனைத்துநாயுடுகள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சங்கத்தின் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


அதியாரப்பட்டி ஊர் மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தொழிலதிபர்கள், தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று சங்கத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக

  • திரு. R. நடராஜன் – தலைவர், கலைஞர் கல்வி நிறுவனங்கள்
  • திரு. D.G. வெங்கடேசன் – தலைவர், தருமபுரி மாவட்ட அனைத்துநாயுடுகள் மகாஜன நலச்சங்கம்
  • திரு. ராஜா – மாவட்ட பொருளாளர்
  • திரு. K.R. நந்தகுமார் – மாவட்ட செயலாளர்
  • திரு. S. பழனியப்பன் (Ex-army) – பொருளாளர், பெரும்பாலை நாயுடு சங்கம்


ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


இன்று நடைபெற்ற நாயுடு சங்கத்தின் பொதுக்குழுவில் கலந்து கொண்ட தருமபுரி மாவட்ட தலைவர் பொதுச் செயலாளர் பொருளாளர்  அவர்களுக்கும், அதிகாரப்பட்டி நாயுடு சங்க கௌரவ தலைவராக AGK சேகர், A மணி, A பள்ளிப்பட்டி செல்வம், கவுண்டம்பட்டி மனோகரன், சதாசிவம் மற்றும் சங்கத் தலைவர் G பழனி, துணைதலைவர்  M ரமேஷ், செயலாளர் R. சரவணன், துணை செயலாளர் இளமதி ராஜா, பொருளாளர் K செல்வம் ஆகியோர் தேர்ந்தெடுத்ததற்கு மிக்க நன்றிதெரிவிக்கப்பட்டது, மேலும் கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும், சமூக முன்னேற்றத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies