Type Here to Get Search Results !

தோழி கூட்டமைப்பில் புதிய தன்னார்வ நிறுவனங்களுக்கு உறுப்பினர் சேர்க்கை - பதிவு செய்ய அழைப்பு.


நல்லம்பள்ளி, ஏப்ரல்.10:


தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தோழி கூட்டமைப்பு, புதிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை உறுப்பினர்களாக இணைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, வேலூர், அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் இந்த கூட்டமைப்பில் தற்போது 85-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன.


இந்த கூட்டமைப்பின் மூலம் உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி, நிறுவனம் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு, ஒவ்வொரு நிறுவனமும் முன்னேற்ற பாதையில் செயல்பட வழிகாட்டப்பட்டு வருகிறது. தற்போது கூட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில் புதிய மாவட்டங்கள் மற்றும் புதிய தன்னார்வ நிறுவனங்களை இணைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தங்கள் நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பில் இணைந்து செயல்பட அழைக்கப்பட்டுள்ளனர்.


இணைய விரும்பும் நிறுவனங்கள் கீழே வழங்கப்பட்டுள்ள Google Form மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம்:

மேலும் தகவல்களுக்கு https://thozhifedtn.1ngo.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம். பதிவு செய்ய கடைசி தேதி 25.04.2026 ஆகும். மேலும் விவரங்களுக்கு 8072592506, 8778184276 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தோழி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies