பென்னாகரம் – ஏப்ரல் 12:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், புலிக்கரை, இராமியம் பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து கை சின்னத்திற்கு ஆதரவு கோரி வாக்கு சேகரித்தார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், “என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பினால், தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்துவேன்” என உறுதியளித்தார். இந்த பிரச்சாரத்தின் போது திமுக ஒன்றிய செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)