இண்டூர், ஏப்ரல். 10:
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேமுதிக வெற்றி வேட்பாளர் டாக்டர் திரு. V. இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவாக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பொதுமக்கள் மத்தியில் நேரில் சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து, இண்டூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்கப்படும் என்றும், ரூ.10,000 கோடி மதிப்பில் காவேரி உபரி நீர் திட்டத்தை மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)