பென்னாகரம், ஏப்ரல். 05:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கஜேந்திரன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மார்ச் 30 முதல் ஏப்ரல் 6, 2026 வரை நடைபெறும் வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கையின் கடைசி நாளான இன்று (ஏப்ரல் 6), கஜேந்திரன் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகிலுள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், பின்னர் திருவள்ளுவர் நகர், பிடிஓ அலுவலகம் பேருந்து நிறுத்தம், முள்ளுவாடி, பேருந்து நிலையம், கடைவீதி வழியாக ஊர்வலமாக பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் சென்றார். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கோபு (உதவி ஆணையர் – ஆயம்) அவர்களிடம் வேட்புமனுவை சமர்ப்பித்தார்.
மேலும், மாற்று வேட்பாளராக தமிழக வெற்றி கழக மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துள்ளார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

