Type Here to Get Search Results !

புற்றுநோய் குழந்தைகளுக்காக கூந்தல் தானம் செய்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு.


தருமபுரி, ஏப்ரல். 04:


புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் “மை தருமபுரி” அமைப்பு, புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு கூந்தல் தானம், இரத்த தானம் உள்ளிட்ட மனிதநேய சேவைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சையால் தலைமுடி உதிரும் குழந்தைகளுக்காக கூந்தல் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.


இந்த நிலையில், தருமபுரி சத்திரம் மேல் தெரு பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் உமா மகேஸ்வரி தம்பதியினரின் மகள் கோபிகா, செந்தில் மெட்ரிக் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவி, புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக தனது கூந்தலை தானமாக வழங்கினார். இந்த மனிதநேய செயலை பாராட்டி, மை தருமபுரி அமைப்பின் சார்பில் மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.


மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, தன்னார்வலர்கள் கணேஷ், மோனிஷா ஆகியோர் மாணவியிடமிருந்து கூந்தல் தானத்தை பெற்றுக் கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies