Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் டி.சி. தவமணி மனு தாக்கல் - வேல்முருகன் முதல்வர் வேட்பாளர் என அறிவிப்பு.


பென்னாகரம், 
ஏப்ரல். 04:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாநில துணை செயலாளர் டி.சி. தவமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இதனைத் தொடர்ந்து, பென்னாகரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோபு (மாவட்ட உதவி ஆணையர் – ஆயம்) அவர்களிடம் டி.சி. தவமணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது என்றும், கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவார் என்றும் தெரிவித்தார்.


மேலும்,
“எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படும். பென்னாகரம் தொகுதியில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படும். அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்” என்று வாக்குறுதி அளித்தார். இந்நிலையில், ஆளும் திமுக அரசை விமர்சித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies