தருமபுரி – ஏப்ரல் 04:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அன்னசாகரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வின் போது,
- குடிநீர் வசதி
- தடையற்ற மின்சாரம்
- கழிப்பறை வசதி
- வாக்குச்சாவடி பாக எண்கள்
- மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம்
- கண்காணிப்பு கேமரா வசதி
உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் தயாராக உள்ளனவா என்பதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மேலும், வாக்காளர்கள் எந்தவொரு அச்சுறுத்தலுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்ய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். அதோடு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நாளன்று நடைபெறும் செயல்பாடுகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது தருமபுரி நகராட்சி ஆணையர் திருமதி வசந்தி, வட்டாட்சியர் திரு. ஜெ. சுகுமார், துப்புரவு ஆய்வாளர்கள் மாதையன், சுசீந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

