பென்னாகரம் – ஏப்ரல் 06:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) வேட்பாளராக போட்டியிடும் பாடி செல்வம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பாமக கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகமான ஆதரவை வெளிப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்த பின், தொகுதி மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையையும் வேட்பாளர் தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

