Type Here to Get Search Results !

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பென்னாகரத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் துவக்கிவைத்தார்.


பென்னாகரம் – ஏப்ரல் 07:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. “தேர்தல் திருவிழா”, “என் வாக்கு என் உரிமை” என்ற வாசகங்களுடன் நடைபெற்ற இந்த பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் 07.04.2026 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள தேர்தலில் தவறாமல் வாக்களிப்பேன், என் வாக்கு விற்பனைக்கல்ல என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி சந்தை வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.


இதனைத் தொடர்ந்து, “தமிழ்நாட்டின் பெருவிழா”, “என் நாடு என் ஓட்டு” என்ற கருத்துகளை வலியுறுத்தும் கிராமிய நாடக நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், “என் வாக்கு என் உரிமை” என்ற வாசகத்துடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. அதேபோல், 100% வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட செல்பி பாயிண்டில் (Selfie Point) மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


இதனைத் தொடர்ந்து, ஒகேனக்கல் சோதனைச்சாவடியில் நடைபெற்று வரும் வாகன தணிக்கை பணிகள், சிசிடிவி கண்காணிப்பு, வாகன பதிவேடுகள் உள்ளிட்ட வசதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் திரு. சு. சுந்தர்ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன், வட்டாட்சியர் திரு. சண்முகசுந்தரம், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. லோகநாதன் உள்ளிட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies