தருமபுரி, ஏப்ரல். 07:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் “தேர்தல் டிராபி 2026” என்ற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் இந்த ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள், ஏப்ரல் 16, 17 மற்றும் 18, 2026 ஆகிய நாட்களில் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த 10 கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ளன. தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதிசெய்யும் விழிப்புணர்வை விளையாட்டின் மூலம் பரப்பும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

