Type Here to Get Search Results !

தருமபுரி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் தீவிர வாக்கு சேகரிப்பு; விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார்.


தருமபுரி – ஏப்ரல் 11:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பாளையம்புதூர், பாகல்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து முரசு சின்னத்திற்கு ஆதரவு கோரி வாக்கு சேகரித்தார்.


அப்போது பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், “என்னை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பினால் விவசாயிகளுக்கு மீட்டர் இல்லாத மின்சார இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஏரி மற்றும் குளங்களில் நீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என உறுதியளித்தார்.


இந்த பிரச்சாரத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் குமார், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies