Type Here to Get Search Results !

பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்புக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ தீர்த்தராமன் வேதனை.


தருமபுரி, ஏப்ரல். 04:


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் தேர்வை எதிர்த்து, கட்சியின் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பி. தீர்த்தராமன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு தருமபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்த தொண்டர்களை புறக்கணித்து, சமீபத்தில் கட்சியில் இணைந்த ஒருவரை பென்னாகரம் தொகுதி வேட்பாளராக அறிவித்தது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார்.

மேலும், தொகுதியுடன் தொடர்பில்லாத, சென்னையில் வசிக்கும் ஒருவரை வெறும் பணக்காரர் என்ற அடிப்படையில் வேட்பாளராக தேர்வு செய்தது தவறான முடிவாகும் என்றும் விமர்சித்தார். இந்த நடவடிக்கை, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி அவர்களின் நோக்கத்தையும், கட்சித் தொண்டர்களின் உழைப்பையும் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பென்னாகரம் தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை கட்சித் தொண்டர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies