Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் 04.04.2026 வரை பெறப்பட்ட வேட்புமனுக்கள் நிலவரம் வெளியீடு.


தருமபுரி – ஏப்ரல் 04:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான விவரங்கள் (04.04.2026 நிலவரப்படி) வெளியிடப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.


பாலக்கோடு (57) தொகுதி:
நாம் தமிழர் கட்சி, திமுக, தமிழர் மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் பல சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 15 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.


பென்னாகரம் (58) தொகுதி:
நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 12 பேர் போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.


தருமபுரி (59) தொகுதி:
நாம் தமிழர் கட்சி, திமுக, தமிழர் மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் பல சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 11 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.


பாப்பிரெட்டிப்பட்டி (60) தொகுதி:
திமுக சார்பில் பி. பழனியப்பன் உள்ளிட்ட பல சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் சார்பில் 13 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


அரூர் (61) தொகுதி:
நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம், இந்திய குடியரசுக் கட்சி (அதவாலே), சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 7 பேர் போட்டியிட மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.


மொத்தமாக, மாவட்டம் முழுவதும் பல்வேறு தேதிகளில் (30.03.2026 முதல் 04.04.2026 வரை) மொத்தம் 58 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இறுதி வேட்பாளர் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies