தருமபுரி – ஏப்ரல் 04:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, 03.04.2026 மாலை 6.00 மணி முதல் 04.04.2026 மாலை 6.00 மணி வரை தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ₹62,400 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,
- பாலக்கோடு (57) தொகுதியில் ₹62,400 பணம் பறிமுதல் செய்யப்பட்டு, 1 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற தொகுதிகளான பென்னாகரம் (58), தருமபுரி (59), பாப்பிரெட்டிப்பட்டி (60), ஹரூர் (61) ஆகிய இடங்களில் எந்தவொரு பணமோ அல்லது பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை.
மேலும், மதுபானம், போதைப்பொருட்கள், மதிப்புள்ள உலோகங்கள் மற்றும் இலவசப் பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஒழுங்குமுறை விதிகளை கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

