Type Here to Get Search Results !

பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜி.கே.எம். தமிழ் குமரன் அறிவிப்பு.


பென்னாகரம், ஏப்ரல். 02:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே.எம். தமிழ் குமரன் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


அவருக்கு 49 வயதாகும். இவர் பி.இ., எம்.பி.ஏ கல்வித்தகுதி பெற்றவர். இவரது தந்தை ஜி.கே. மணி, தாயார் சுந்தரம்மாள். மனைவி சந்தியா. மகள் நித்தியா, மகன் கோவிலான் குமார் ஆகியோர் உள்ளனர். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும் உள்ளார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அஜ்ஜினஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர். வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியின் ஆதரவுடன் ஜி.கே.எம். தமிழ் குமரன் போட்டியிட உள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies