Type Here to Get Search Results !

பாலக்கோடு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் டி.என்.வி. செந்தில்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.


பாலக்கோடு, ஏப்ரல். 04:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்–2026 முன்னிட்டு, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் டி.என்.வி. செந்தில்குமார் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆதரவை பெற்ற வேட்பாளராக டாக்டர் செந்தில்குமார் வேட்புமனுவை சமர்ப்பித்தார்.


இந்த நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஆதரவாளர்களிடம் உரையாற்றிய டாக்டர் டி.என்.வி. செந்தில்குமார், “பாலக்கோடு தொகுதி மக்களின் முழு ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெற்று, தொகுதியின் வளர்ச்சிக்காக முழுமையாக பாடுபடுவேன்” என உறுதியளித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies