பாலக்கோடு, ஏப்ரல். 03:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்–2026 முன்னிட்டு, பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பாலக்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வரவிருக்கும் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கையெழுத்து இயக்கம், நாடகம், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட முறைகளின் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு பரப்பப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, பாலக்கோடு பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட மக்கள் திரளும் பகுதிகளில் அதிகாரிகள் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
என்ற வாசகங்கள் மூலம் பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி அலுவலர் அசோக்குமார், ஆர்.ஐ. காளிஸ்வரன், வி.ஏ.ஓ. சிவசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

