பென்னாகரம், ஏப்ரல். 04:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்–2026 முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் சார்பில் ஜி.கே.எம். தமிழ்குமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று பென்னாகரம் தொகுதிக்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரனுக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமுமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் நாகதாசம்பட்டி பிரிவு சாலையில் மேளதாளம் முழங்க, மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர். நாகதாசம்பட்டி பெட்ரோல் பங்க் சாலையிலிருந்து நாகதாசம்பட்டி பேருந்து நிறுத்தம் வரை ஊர்வலமாக அழைத்து சென்று, வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)


