தருமபுரி – ஏப்ரல் 05:
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், அதே நேரத்தில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி அறிமுக கூட்டம் ஜோதி மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் தலைமை தாங்கினார். பாமக மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன், பாஜக மாவட்ட தலைவர் சரவணன், அமமுக மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன், தமாகா மாவட்ட தலைவர் புகழேந்தி, புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து தீவிர களப்பணியில் ஈடுபட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, பாமக மாநில துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி உள்ளிட்டோர் பேசினர். மகளிர் அணி மாவட்ட தலைவர் ஜெயலஷ்மி நன்றி தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

