Type Here to Get Search Results !

பாலக்கோடு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு.


பாலக்கோடு, ஏப்ரல். 03:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் 30 அடி உயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜிட்டாண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், பிக்கனஅள்ளி, வெள்ளிசந்தை உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் அவர் வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக மல்லுப்பட்டியில் உள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


பின்னர் நடைபெற்ற பிரச்சாரத்தில், தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து அவர் விளக்கமளித்தார். குறிப்பாக மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும், 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்து பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.


இந்த வாக்கு சேகரிப்பில் திமுக மாவட்ட பொருளாளர் முருகன், தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், ஒன்றிய செயலாளர் வக்கீல் கோபால், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், விவசாய அணி மாநில துணை செயலாளர் சுப்ரமணி, இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிபிரசாத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies