Type Here to Get Search Results !

பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி. அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பு.


பாலக்கோடு, ஏப்ரல். 03:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் என்.டி.ஏ. கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தண்டுகாரணஅள்ளி, தொட்டார்தனஅள்ளி, நல்லாம்பட்டி, வேப்பிலஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அவர் வீடு தோறும் சென்று பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.


பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், “கடந்த தேர்தலில் திமுக அளித்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சிலிண்டருக்கு ₹100 வழங்குவதாக கூறியதும் நிறைவேறவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் கூட முழுமையாக வேலை வழங்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார். மேலும், “மகளிர் உதவித்தொகையை அனைவருக்கும் வழங்குவோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்த பிறகு தகுதி–தகுதி இல்லாதவர் என பேதம் பார்த்து வழங்கிய திமுக அரசை மக்கள் நிராகரிக்க வேண்டும்” என்றார்.

அவர் தொடர்ந்து, “2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 1 லிட்டர் பாமாயில், 1 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும். மேலும் ₹10,000 கருணைத் தொகை, ‘குல விளக்கு’ திட்டத்தின் கீழ் மாதம் ₹2,000, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும்” என்று வாக்குறுதி அளித்தார். இறுதியாக, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.


இந்த வாக்கு சேகரிப்பில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies