தருமபுரி – ஏப்ரல் 04:
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்.பி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரூர் தொகுதி திமுக வேட்பாளர் அ. சண்முகம், தருமபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன், தொகுதி பார்வையாளர்கள் செங்குட்டுவன், சத்தியமூர்த்தி, நகர செயலாளர்கள் நாட்டான் மாது, எம்.பி. கௌதம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தருமபுரி, பென்னாகரம் மற்றும் அரூர் தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. மேலும், அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து தீவிர களப்பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, தேமுதிக வேட்பாளரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதையும் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிற்றரசு, தேமுதிக மாவட்ட செயலாளர்கள் குமார், விஜய சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிசுபாலன், மதிமுக மாவட்ட செயலாளர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் பாண்டியன், சாக்கன் சர்மா, கருப்பண்ணன், திராவிட கழகம் மாநில நிர்வாகி ஜெயராமன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

