தருமபுரி – ஏப்ரல் 13:
சமத்துவ தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் “சமத்துவ நாள்” உறுதிமொழி நிகழ்ச்சி இன்று (13.04.2026) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உறுதிமொழியில், சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதியின் பெயரில் நடைபெறும் சமூக அடக்குமுறைகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என்றும், ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவாக சமத்துவத்தை நிலைநிறுத்த பாடுபடுவோம் என்றும் உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும், சக மனிதர்களை சாதியின் அடிப்படையில் ஒருபோதும் பிரிக்காமல், அனைவருடனும் சமத்துவ மனப்பான்மையுடன் நடந்து கொண்டு, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வாழ்நாள் முழுவதும் செயல்படுவோம் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் மூலம் சமத்துவம், மனிதநேயம் மற்றும் சமூக நீதியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)