தருமபுரி – ஏப்ரல் 06:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் என்.டி.ஏ. கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கட்சி கொடிகள், முழக்கங்களுடன் உற்சாகமான சூழலில் வேட்பாளர் ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தார்.
அங்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கே.பி. அன்பழகன் தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தார். இந்த நிகழ்வு பாலக்கோடு தொகுதியில் தேர்தல் களத்தின் சூட்டை அதிகரித்துள்ளதுடன், என்.டி.ஏ. கூட்டணியின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

