Type Here to Get Search Results !

தருமபுரி: NDA கூட்டணி வேட்பாளர் திருமதி. சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார்.


தருமபுரி – ஏப்ரல் 06:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி (NDA) சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்ற பெரும் ஊர்வலம் தருமபுரி நகரில் நடைபெற்றது. கட்சி கொடிகள், முழக்கங்கள், மேளதாளம் ஆகியவற்றுடன் நடைபெற்ற இந்த ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது.


பின்னர், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந்த சௌமியா அன்புமணி, தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி காயத்ரி அவர்களிடம் தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில், பாமக மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், பாஜக மாவட்ட செயலாளர் சரவணன், அதிமுக நகரச் செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.


வேட்புமனு தாக்கல் செய்த பின், ஆதரவாளர்களிடம் உரையாற்றிய சௌமியா அன்புமணி, “தருமபுரி தொகுதி மக்களின் முழு ஆதரவுடன் வெற்றி பெற்று, தொகுதியின் வளர்ச்சிக்காக செயல்படுவேன்” என உறுதியளித்தார். இந்த நிகழ்வு, தருமபுரி தொகுதியில் NDA கூட்டணியின் ஒருங்கிணைந்த களப்பணிக்கும், தேர்தல் உற்சாகத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies