நல்லம்பள்ளி – ஏப்ரல் 09:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட வீரிசெட்டிப்பட்டி கிராமத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து முரசு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் சென்ற இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில் தேமுதிக மாவட்ட செயலாளர் குமார், நகர செயலாளர் சுரேஷ், நல்லம்பள்ளி திமுக ஒன்றிய செயலாளர் ஏ. எஸ். சண்முகம் உள்ளிட்டோர் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் காவேரி செட்டி, வெங்கடேசன், முனிராஜ், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

