Type Here to Get Search Results !

அரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகம் அவர்கள் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


அரூர் – ஏப்ரல் 06:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயக கூட்டணி சார்பில் அரூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் நிகழ்வில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். மேலும், கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிசுபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாக்கன் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் வேட்பாளர் சண்முகம் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies