Type Here to Get Search Results !

‘தமிழர் வாழ்வுரிமை கூட்டணி’ சார்பில் தருமபுரியில் த.வா.க வேட்பாளர் DBJ பிரசாந்த் வாக்கு சேகரிப்பு.


தருமபுரி – ஏப்ரல் 07:


2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக), 35 அரசியல் கட்சிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட அமைப்புகளுடன் இணைந்து ‘தமிழர் வாழ்வுரிமை கூட்டணி’யை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதுடன், அனைத்து தொகுதிகளிலும் ‘கேமரா’ சின்னத்தில் களம் காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் DBJ பிரசாந்த், தருமபுரி நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து ‘கேமரா’ சின்னத்திற்கு ஆதரவு கோரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies