Type Here to Get Search Results !

தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் திருமதி. சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


தருமபுரி – ஏப்ரல் 07:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திருமதி சௌமியா அன்புமணி பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவாரங்காட்டூர், கொமத்தம்பட்டி, பூமரத்தூர், விஜய்நகர், ராம்நகர், சின்னானேரி, கோம்பேரி, மிட்டாரெட்டிஅள்ளி, நார்த்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடு தோறும் சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து, மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


இந்த வாக்கு சேகரிப்பின் போது, பாமக நிர்வாகிகள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். தொகுதி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் சௌமியா அன்புமணி தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies