தருமபுரி, ஏப்ரல். 09:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்டப் பிரிவு சார்பில், 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாம் ஏப்ரல் 17, 2026 முதல் மே 1, 2026 வரை தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும். தடகளம், கால்பந்து, இறகுபந்து, வாலிபால், ஜிம்னாஸ்க்ஸ், ஸ்கேட்டிங், கபாடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சி முகாம் தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படுவதுடன், பயிற்சியை நிறைவு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் விளையாட்டு திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

