தருமபுரி – ஏப்ரல் 09:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் லட்சுமிநாராயணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவியர்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” மற்றும் “விரல் நுனியில் தீர்ப்பை எழுதுவோம்” என்ற கருத்துக்களை வலியுறுத்தி மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவியர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் “என் வாக்கு விற்பனைக்கல்ல” என்ற உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பின்தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக:
- மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து வாக்களிக்கும் முறைகள் விளக்கப்பட்டது
- கலைநிகழ்ச்சிகள் மூலம் ஜனநாயகத்தின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது
- “VOTE 100%” என்ற வடிவில் மாணவியர்கள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
- “என் வாக்கு என் உரிமை” என்ற ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன
மேலும், இளம் வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி, பிறரையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் திரு. சு. சுந்தர்ராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி இரா. காயத்ரி, வட்டாட்சியர்கள் திரு. ஜெ. சுகுமார், திரு. பிரசன்னமூர்த்தி உள்ளிட்டோர் மற்றும் கல்லூரி மாணவியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

