தருமபுரி – ஏப்ரல் 13:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அவரது மகள்களான சங்கமித்ரா மற்றும் சஞ்சுத்ரா ஆகியோர் தருமபுரி நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக குமாரசாமி பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர். அவர்களுக்கு செல்லும் இடங்களில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: “எங்கள் தாயார் சௌமியா அன்புமணியை வெற்றி பெறச் செய்தால் பெண்களின் உரிமைகளுக்காக சட்டமன்றத்தில் வலியுறுத்துவார். தற்போது பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க தொடர்ந்து போராடுவார்” என தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் பாமக நகரச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட நிர்வாகி டி.ஜி. மணி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)