Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் ரூ.4.09 லட்சம் பறிமுதல் – 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.


தருமபுரி – ஏப்ரல் 12:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் பறக்கும் படை (FST) மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் (SST) மேற்கொண்ட தீவிர சோதனையில், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.4,09,773 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 11.04.2026 மாலை 6.00 மணி முதல் 12.04.2026 மாலை 6.00 மணி வரை நடைபெற்ற சோதனையில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தொகுதி வாரியான விவரம்:

  • பாலக்கோடு (57)
    • வழக்குகள்: 1
    • மதுபானம்: 4.865 லிட்டர் (₹3,333)
    • மொத்தம்: ₹3,333
  • பென்னாகரம் (58)
    • வழக்குகள்: 1
    • ரொக்கப்பணம்: ₹4,00,000
    • மொத்தம்: ₹4,00,000
  • தருமபுரி (59)
    • பறிமுதல்: இல்லை
  • பாப்பிரெட்டிப்பட்டி (60)
    • வழக்குகள்: 3
    • மதுபானம்: 14.435 லிட்டர் (₹6,440)
    • மொத்தம்: ₹6,440
  • அரூர் (61 – தனி)
    • பறிமுதல்: இல்லை

மொத்த நிலவரம்:

  • வழக்குகள்: 5
  • ரொக்கப்பணம்: ₹4,00,000
  • மதுபானம்: 19.3 லிட்டர் (₹9,773)
  • மொத்த பறிமுதல்: ₹4,09,773


தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies