தருமபுரி – ஏப்ரல் 11:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் 058-பென்னாகரம் மற்றும் 059-தருமபுரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (11.04.2026) மேற்கொள்ளப்பட்டது.
வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, ஏற்கனவே அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், பென்னாகரம் மற்றும் தருமபுரி தொகுதிகளில் கூடுதல் இயந்திரங்கள் தேவையாக இருப்பதால், இருப்பு கிடங்கிலிருந்து கணினி வழியாக ரேண்டம் முறையில் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நடைமுறை தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு. ஏ. பாலசுந்தரம், தருமபுரி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி இரா. காயத்ரி, தேர்தல் வட்டாட்சியர் திரு. அன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)