தருமபுரி – ஏப்ரல் 08:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்க வசதியாக சில வாக்குச்சாவடிகள் புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில், தொடர்புடைய வாக்காளர் பட்டியல் பாகங்களில் உள்ள வாக்காளர்கள் புதிய வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாற்றப்பட்ட வாக்குச்சாவடிகள் – முழு பட்டியல்
பாலக்கோடு (57) தொகுதி
- பாகம் 126 – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, செம்மண்திட்டு (636806)
- பாகம் 253 – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கெண்டிகானஅள்ளி (635205)
பாப்பிரெட்டிப்பட்டி (60) தொகுதி
- பாகம் 146 – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சில்லாரஅள்ளி (635303)
- பாகம் 148 – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சில்லாரஅள்ளி (635303)
- பாகம் 149 – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சில்லாரஅள்ளி (635303)
- பாகம் 187 – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, டி.அய்யம்பட்டி (635302)
- பாகம் 188 – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, டி.அய்யம்பட்டி (635302)
அரூர் (தனி) (61) தொகுதி
- பாகம் 128 – அரசு உயர்நிலைப்பள்ளி, மத்தியம்பட்டி (636902)
- பாகம் 182 – கிராம ஊராட்சி சேவை மையம், ஒடசல்பட்டி (636903)
- பாகம் 183 – கிராம ஊராட்சி சேவை மையம், ஒடசல்பட்டி (636903)
- பாகம் 294 – அரசு உண்டு உறைவிட துவக்கப்பள்ளி, எஸ். தாதம்பட்டி (636903)
மாவட்டத்தில் மொத்தம் 1,596 வாக்குச்சாவடிகள் மற்றும் 957 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 12,52,019 ஆகும். இதில் ஆண்கள் 6,29,980, பெண்கள் 6,21,887 மற்றும் மூன்றாம் பாலினத்தினர் 152 பேர் உள்ளனர்.
மேலும், 18–19 வயதுக்குட்பட்ட 34,147 இளம் வாக்காளர்கள், 20–29 வயதுக்குட்பட்ட 2,62,404 வாக்காளர்கள், 85 வயதுக்கு மேற்பட்ட 9,485 முதியோர், 11,523 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 1,640 சேவை வாக்காளர்கள் உள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், மின்சாரம், கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சக்கர நாற்காலி, தனி வரிசை, தன்னார்வலர் உதவி உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமுறைகள் கண்காணிக்க பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் புகார்களை C-Vigil செயலி, 1800 425 7017 என்ற கட்டணமில்லா எண், 9443947017 வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.
வாக்குச்சாவடிகளில் மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது; அதற்கான டெபாசிட் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர் ஆகியோருக்கு தனி வரிசை ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து வாக்காளர்களும் எந்தவித தூண்டுதலுக்கும் ஆட்படாமல் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

