தருமபுரி – ஏப்ரல். 14:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற உள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டத்திலுள்ள 57-பாலக்கோடு, 58-பென்னாகரம், 59-தருமபுரி, 60-பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் 61-அரூர் (தனி) ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை பொருத்து ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, 14.04.2026 அன்று அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் சம வாய்ப்பு முறையில் (Randomization) வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த செயல்முறையில் கட்டுப்பாட்டு இயந்திரம் (Control Unit), வாக்குப்பதிவு இயந்திரம் (Ballot Unit) மற்றும் VVPAT இயந்திரங்கள் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கப்பட்டன.
மேலும், 16.04.2026 அன்று போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலின்படி வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். தேர்தல் செயல்முறைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)