Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர கண்காணிப்பில் ₹9,600 மதிப்பிலான பொருட்கள் 240 துண்டுகள் பறிமுதல்.


தருமபுரி – ஏப்ரல் 07:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் பறக்கும் படை (FST) மற்றும் நிலையான கண்காணிப்பு குழு (SST) அதிகாரிகள் மேற்கொண்ட 24 மணி நேர சோதனையில் ₹9,600 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


06.04.2026 மாலை 6.00 மணி முதல் 07.04.2026 மாலை 6.00 மணி வரை நடைபெற்ற சோதனைகளின் விவரப்படி, அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பணம், மதுபானம், போதைப்பொருள், விலைமதிப்புள்ள உலோகங்கள் உள்ளிட்டவை எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.


ஆனால், பாலக்கோடு பகுதியில் “Freebies / Other Items” பிரிவில் 240 துண்டு துணிகள் (Towels) ரூ.9,600 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எந்த தொகுதியிலும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies