தருமபுரி – ஏப்ரல் 03:
தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கு பாமக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சரவணன் வேட்பாளராக தலைமை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வேட்பாளர் சரவணன் தருமபுரி நகர பேருந்து நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். மேலும், அவரது வருகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
அப்போது பேசிய சரவணன், “தருமபுரி தொகுதியில் மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து, வளர்ச்சி பணிகளில் உறுதியுடன் செயல்படுவேன்” என்று தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

