தருமபுரி – ஏப்ரல் 02:
தருமபுரி நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தருமபுரி சட்டமன்ற வேட்பாளர் சௌமியா அன்புமணி அறிமுகக் கூட்டங்கள் அமமுக மற்றும் பாஜக சார்பில் தனித்தனியாக நடைபெற்றன. முதலில், தருமபுரி நகர அமமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சௌமியா அன்புமணிக்கு கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் உரையாற்றி, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி நகர பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சௌமியா அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த இரண்டு கூட்டங்களிலும் பாமக மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், அமமுக மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன், பாஜக மாவட்ட தலைவர் சரவணன், நகர தலைவர் சாய் ஆறுமுகம், ஓபிசி அணியின் மாவட்ட தலைவர் சசிகுமார், நகர செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)


