பாப்பாரப்பட்டி – ஏப்ரல் 01:
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே திருமல்வாடியில் உள்ள பாழுத்துமலை அருள்மிகு ஸ்ரீ பழனியாண்டவர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புகழ்பெற்ற இத்திருக்கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ பழனியாண்டவருக்கு பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், பால், விபூதி உள்ளிட்ட புனிதப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி சந்தன காப்பு அணிந்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் தீபாராதனை நடைபெற்றது.
விழாவின் ஒரு பகுதியாக, பக்தர்கள் அழகு குத்துதல், காவடி எடுப்பது, பால் குடம் எடுத்தல், தீமிதித்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர். இந்த விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருமல்வாடி ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)


